தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திமுக – அதிமுகவிற்குள் இரகசிய ஒப்பந்தம் ஒன்று உள்ளது – முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருது நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:– தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் திருமணம் மற்றும் துக்க வீட்டில் கூட முகத்தில் முழிக்க மாட்டார்கள். ஆனால் இருவருக்குள் ஒருவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளனர்.muththarasan

இருவருக்கும் மக்கள் மீது நம்பிக்கை இல்லை. பணத்தின் மீதுதான் நம்பிக்கை. இதனால் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்குமா? என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் மீது ஏற்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணியும், ஊராட்சி தலைவர் முத்துபாண்டியும் பணம் பட்டுவாடா செய்ததை கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டு பிடித்து போலீசாரிடம் கூறினார்கள்.

ஆனால் கண்டு பிடித்தவர்கள் மீதே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருகின்றனர். தேர்தல் அறிக்கையில் விவசாய கடனை ஜெயலலிதா தள்ளுபடி செய்வேன் என்கிறார். ஏற்கனவே கடன் நெருக்கடியில் தமிழகம் சிக்கி தவிக்கிறது. இத்திட்டங்களை செயல்படுத்த எங்கிருந்து பணம் வரும்? ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்கிறார் கருணாநிதி. 1971 வரை நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கியவரே அவர்தான்.

தற்போது பூரண மதுவிலக்கு குறித்து பேசுகிறார். தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...