தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்த பேச்சுவார்த்தையில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்

முகதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்த பேச்சுவார்த்தையில் இன்று திமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லீக் கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிவு இன்னும் எட்டப்படாத நிலையில் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக – காங்கிரஸ் கட்சிகளுடன் திமுக ஈடுபட்டுள்ளது தமிழக அரசியிலில் ஒரு திருப்பத்தை கொண்டு வரக்க்கூடும் என எதிரிபார்க்கப்படுகிறது. நேற்று இரவு தேமுதிகவிடம் இருந்து திமுகவுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் திமுக அபிமானிகள் பலர் மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் மேலிடத்திலிருந்து மீண்டும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சு தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் இருப்பதால் கூட்டணி விசயத்தில் அவசரப்படாமல் முடிவெடுக்க உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...