Designed by Iniyas LTD
திருகோணமலையில் பாதீனியத்தால் உயிரிழக்கும் மான்கள் – நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
திருகோணமலையை அழகுபடுத்தும் மான்கள் பாத்தீனியம் புல்செடியால் பெருவாரியாக இறப்பதாக அப்குதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதைவிட பாதீனியம் செடியால் அங்குள்ள மக்களுக்கு ஒவ்வா நோய்கள் வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மான்களுக்கு தண்ணி தொட்டி கட்டுவதைப்போல் இந்த விடயத்திலும் மிகக் கூடிய அக்கறை செலுத்தி இப் பாத்தீனியத்தை அழித்தால் மான்கள் இறப்பு குறையும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திருகோணமலை கோட்டையை அண்டிய பகுதியிலிருந்து காளி கோவிலடி , மற்றும் இந்துகல்லுரி மைதானம் மட்டும் மிக அடத்தியாக பாதீனியயம் பரவி விட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான சூழலில் திருமலை மண்ணில் சுதந்திரமாக நடமாடும் இந்த மான் கூட்டத்தை பாதுகாக்க அரச தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும், இது தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

