தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருச்சியில் திமுகவினர் மோதல்

திருச்சி உறையூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்திற்கான விளம்பர போஸ்டர்களில், திருச்சி சிவாவின் பெயரை அச்சிடவில்லை எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கே.என்.நேருவின் அலு‌லகத்தை முற்றுகையிட்டனர்.  dmk

கே.என் நேரு, திருச்சி சிவாவை திட்டமிட்டு புறக்கணிப்பதாக திமுக மாணவர் அணியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர். முற்றுகையிட்டவர்களிடம் கே.என். நேரு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.   இந்நிலையில், திருச்சி சிவாவின் மகன் சூரியாவின் தொழிற்சாலை அலுவலகத்தை சிலர் தாக்கினர்.

இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள், சிசிடிவி காமிராக்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த 3 பேர் காயமடைந்தனர்.   இதுகுறித்து விமானநிலைய காவல்துறையினரிடம் சூரியா புகார் அளித்துள்ளார். கே.என். நேருவின் அலுவலகத்தை முற்றுகையிட்டதற்காகவே அவரது ஆதரவாளர்கள் ‌இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

Comments
Loading...