தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருச்சி சிறப்பு முகாமில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடுப்புக்கு கீழ் இயக்கம் இல்லாத இந்த இளைஞர் ஒருவர், இன்று காலை 5:30 அளவில், தனது மணிக்கட்டின் உயிர் நாடி நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் உள்ளார்.

suicide_attm_003

மேலும் அந்த இளைஞர் 2012 ஆண்டு விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சுயமாக இயங்க முடியாத இவரை பராமரிக்க பராமரிப்பாளர்கள் கூட நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் சிறை அதிகாரிகளால் விடுதலை செய்யப்படவில்லை. முகாமில் இருக்கும் அனைத்து அகதிகளும் இப்பொழுது உண்ணாவிரதம் இருக்கும் நிலையில், குறித்த நபர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

suicide_attm_005

சுரேஷ்குமார் த/பெ ஞானசௌந்தரம் (வயது 37) என்பவரே தனது அறையில் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...