தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம்

FISHERMEN_0தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 கடந்த 26-ந் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் படகை, இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மோதி மூழ்கடித்துள்ளனர்.

 இதில் மீனவர் வில்வராஜ், படகுக்கு அடியில் சிக்கி உயிர் இழந்துள்ளார். அவரின் உடலை உடனடியாக மீட்க வேண்டும், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் அச்சமின்றி மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம் தொடங்கினர்.

 இந்த போராட்டத்தால் 5 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும், சுமார் 25 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...