Designed by Iniyas LTD
திருச்சி மத்தியச்சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மத்தியச்சிறையில் விசாரணைக் கைதி பழனிசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமயபுரம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (32). இவர் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்படிருந்தார்.
இந்நிலையில், பழனிசாமி இன்று சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து சிறைக்காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.