Designed by Iniyas LTD
திருச்சி விமான நிலையத்தில் ஜூலை 7 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு
திருச்சி விமான நிலையத்தில் ஜூலை 7-ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதன் எதிரொலியாக இந்தியாவின் சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.