தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருட்டு மணல் அகல்வை தடுத்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்

அரக்கோணம் அருகே தக்கோலத்தில் மணல் திருட்டை தடுக்கச்சென்ற தக்கோலம் போலீஸ் ஏட்டு கனகராஜ் கடந்த 20–ந் தேதி டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார். இது தொடர்பாக தே.மு.தி.க. கவுன்சிலரின் மகன் சுரேஷ் அவரது தம்பி சத்யா கைது செய்யப்பட்டனர். threa

இதைத்தொடர்ந்து தக்கோலம் பகுதியில் மணல் திருட்டை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரக்கோணம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணப்பன் மற்றும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் தக்கோலம் அருகே முருங்கை ஆற்றுப்பகுதியில் மணல் எடுக்கப்படுவதாக சப்– இன்ஸ்பெக்டர் அன்புச்செல்விக்கு தகவல் கிடைத்தது.

சப்– இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஏட்டு கோபாலகிருஷ்ணன், போலீசார் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு ஜீப்பில் விரைந்து சென்றனர். அங்கு டிராக்டரில் பாண்டியன் என்பவர் மணல் எடுத்துக்கொண்டு இருந்தார். அவரிடம் மணல் எடுக்கக்கூடாது என எச்சரித்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது பாண்டியன் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தையால் பேசி சப்–இன்ஸ்பெக்டர் அன்புச்செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாண்டியனை (வயது 31) போலீசார் கைது செய்து அங்கிருந்த டிராக்டரை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பாண்டியன் தக்கோலம் பேரூராட்சி தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார்.

மேலும் போலீசார் தக்கோலம் அடுத்த மாங்காட்டுசேரி ஆற்றுபகுதியில் மணல் எடுத்து கொண்டு இருந்த தக்கோலத்தை சேர்ந்த தணிகாசலம் (39), லோகேஷ் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்து மணல் ஏற்றி கொண்டு இருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Comments
Loading...