தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருமணம் முடிக்க இருந்த தம்பதி நீரில் மூழ்கி பலி!

625.0.560.320.160.600.053.800.668.160.90-8-300x176வீட்டை விட்டு ஓடிப்போனதாக கூறப்பட்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த 21 வயதான ருவான் குமார என்ற இளைஞனும், பொலன்னறுவையைச் சேர்ந்த 19 வயதான அயேஷா என்ற யுவதியும், அநுராதபுரம், புதபிம மஹாபுலன்குளப் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், இருவரையும் வீட்டினர் சாமாதனப்படுத்தி திருமண பேச்சுக்களை முடித்துள்ளனர்., நாளை செவ்வாய்க்கிழமை (28) திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவிருந்த வேலை இவர்கள் அனுராதபுர சிறிய குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளனர்.

பின்னர் தாமரை பறிக்கும் தோணி ஒன்றில் ஏறி குளத்தை சுற்றி வந்துள்ளனர். குளத்தின் நடுப்பகுதியில் வைத்து அந்த தோணி புரண்டுள்ளது இருவரும் நீரில் விழுந்துள்ளனர்.. அதனை கரையில் இருந்து அவதானித்த சிறுவர்கள் இவர்கள் விளையாட்டுக்கு இவ்வாறு செய்கிறார்கள் என நினைத்து உதவிக்கு யாரையும் அழைத்தில்லை.

இன்று குளத்தில் மூழ்கிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

படகில் சென்ற ஆணும் பெண்ணும் நீரில் மூழ்கி பரிதாப மரணம்

அனுராதபுரம் – பண்டாரபுலன்குளம் ஏரியில், படகில் பயணம் மேற்கொண்ட ஆணும் பெண்ணும் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (27) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பொலன்னறுவை அம்பகஸ்வேவ பகுதியை சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட பின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரதேபரிசோதனை மேற்கொள்வதற்காக சடலங்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...