Designed by Iniyas LTD
திருமலையில் கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!
திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திகட்டுவௌப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை நான்கு வயதுடைய எல்.நிமேஷ் என்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளதாக ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்புடைய பதிவு
இந்தச் சிறுவனின் தந்தையும் தாயும் கொழும்பில் தனியார் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்ற நிலையில், தந்தையின் தாயாருடன் சிறுவன் இருந்து வந்துள்ளான். இந்தச் சிறுவனை நீண்ட நேரமாகக் காணாமையைத் தொடர்ந்து தேடியபோது, கிணற்றில் சிறுவனின் சடலமாகக் காணப்படுவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.