தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருமலையில் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்!

hand-grenadeதிருகோணமலை உப்புவெளி பகுதியில்  வீடான்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வீட்டிற்கு சிறிதளவான சேதம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவே  இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை,சம்பவத்துடன் தொடர்புடைய  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.
Comments
Loading...