Designed by Iniyas LTD
தீவிரமடைந்துள்ள கேப்பாபிலவு மக்களின் போராட்டம்…
கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்புலவு மக்கள் அங்குள்ள இராணுவமுகாம் வாயிலில் ஆரம்பிக்கப்பட்ட முற்றுபை் போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இராணுவ முகாமுக்கு முன்பாக, பெண்களும் குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த பொதுமக்களும், அருட்சகோதரிகளும் பொது அமைப்புக்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், கேப்பாப்புலவில் உள்ள தங்களது காணிகளை விடுவித்துத் தருமாறு வலியுறுத்தி 84 குடும்பங்களினால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, ஒரு மாதகால அவகாசம் வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்டது.
எனினும், வழங்கப்பட்ட வாக்குறுதிக்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதையடுத்து, படைமுகாம் வாயிலில் குறித்த மக்கள் தமது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.