Designed by Iniyas LTD
தீவிரவாத அமைப்பில் இணைந்த இந்தியா இளைஞர் நாடு திரும்பியுள்ளார்
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாணைச் சேர்ந்த 4 இளைஞர்களில் ஒருவரான ஆரிப் மஜீத் நேற்று இந்தியா திரும்பினார். தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அந்த இளைஞரை தனது பாதுகாப்பில் எடுத்து விசாரித்து வருகிறது. ஈராக் யாத்திரை மேற்கொண்ட கல்யாண் இளைஞர்கள் 4 பேர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து விட்டதாக ஒரு சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி இருந்தது. அதில் ஒருவர் போரில் கொல்லப்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஈராக் சென்ற இளைஞர்களில் ஒருவரான ஆரிப் மஜீத் நேற்று இந்தியா திரும்பினார். அவர் தற்போது தேசியப் புலனாய்வு அமைப்பின் பாதுகாப்பில் இருக்கிறார். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகள் மற்றும் ஈராக்கில் அந்த தீவிரவாத அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்ட 40 இந்தியர்களின் நிலைமை குறித்து அந்த இளைஞரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஆரிப் மஜீத் இந்தியா திரும்பி இருப்பதைத் தொடர்ந்து மற்றவர்களும் இந்தியா திரும்புவதற்கு விரும்புவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.