தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தென்மராட்சி எல்லை பகுதியில் 77 கிலோ கிராம் கேரளா கஞ்சா பறிமுதல்…

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் கஞ்சா கடத்தல்கார்களிடமிருந்து   77 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை விசேட புலனாய்வு துறையினர்   கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.
 கடத்தல்கார்கள் இருவரை யாழ் நகர் பகுதியில் இருந்து தென்மராட்சி பகுதி வரையில் பின் தொடர்ந்து சென்ற விசேட புலனாய்வு துறையினர்  , தென்மராட்சி எல்லை பகுதியில் வைத்து அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.
இதன் போது அவர்களிடம் இருந்த  கஞ்சா போதை பொருளை  பறிமுதல் செய்ததோடு குறித்த இருவரையும்  விசேட புலனாய்வு துறையினர்    கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கஞ்சா போதைபொருளையும்  விசேட புலனாய்வு துறையினர்    சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும்   கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் இருவரும் வடமராட்சி மற்றும் வெற்றிலைக்கேணி  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Comments
Loading...