தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீசுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்

l-k-sudhishதேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனரும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான சுதீசுக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.  திரைப்பட விநியோக உரிமை தொடர்பாக ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர், சுதீஷ் மீது தொடர்ந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 மேலும் இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது சுதீஷ் ஆஜராக வேண்டும் என நீதிபதி பசும்பொன் சண்முகையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால், விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, சுதீஷிற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Comments
Loading...