Designed by Iniyas LTD
தேர்வு எழுதுபவர்களுக்கு ஹால் டிக்கெட் விநியோகம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி தொடங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் நேம், பாஸ்வேர்டை பயன்படுத்தி டவுன்லோடு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.