Designed by Iniyas LTD
தொடரூந்து சேவையின் 3ஆம் தர பணியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, தொடரூந்து சேவையின் 3ஆம் தர பணியாளர்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தொடரூந்து நிலைய சமிக்ஞையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யு.ஜீ.வை.எஸ். ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
பணியாளர்களின் வேதன பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடரூந்து நிலைய சமிக்ஞையாளர்கள், தொடரூந்து பயண அனுமதிப்பத்திர சேகரிப்பாளர்கள், பொருட்கள் பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
