தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படாது என்பது உறுதி -சாந்தி எம் பி ….

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் முன்பள்ளி ஆசிரியர்களை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் முன்பள்ளி ஆசிரியர்களை நிறுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருப்பதாகவும் தம்மை வேலையில் இருந்து நிறுத்துவதாகவும் குழப்ப நிலைகள் நிலவிவரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது

துணுக்காய் நந்தகுமார் நகரில் உள்ள முன்பள்ளியில்  இந்த சந்திப்பு இடம்பெற்றது சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா ,

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் சேவையாற்றும்  முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக பல தவறான முடிவுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்கிறது என்று ஊடகங்கள் வாயிலாக பல தவறான செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன

இன்று நான் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மாந்தை கிழக்கு ஒட்டுசுட்டான் கோட்டங்களை சேர்ந்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களை சந்தித்தேன்.

  இதன்போது இந்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்ன கதைத்திருக்கிறோம் என்ன நடவடிக்கை எடுக்கபோகிறோம் என்பது தொடர்பாக தெரியவில்லை .

அவர்களுக்கு தெளிவு படுத்தியபோதுதான் அவர்களுக்கு விளங்கியது எமது நிலைப்பாடு ஊடகங்களில் தவறான செய்திகள் வந்துள்ளது என்பதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்

அவர்கள் தாங்கள் முற்றுமுழுதாக கல்வி திணைக்களத்தோடு இணைந்து சேவையாற்றுவதற்க்கு தமது விருப்பத்தை  தெரிவிக்கின்றனர் .

கல்வித்திணைக்களத்தின் கீழ் சேவையாற்ற சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் அவர்கள் 2 வருட பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள் அவர்களை சேவையில் இணைக்கும் பொது வயது உள்ளிட்ட காரணங்களால்  புறக்கணிக்ககூடாது என்பதனை தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட கூடிய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படாது என்பது உறுதி இந்த ஆசிரியர்களுக்கு  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக வழங்கப்படும் சம்பளத்தை,

கல்வித்திணைக்களம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுத்து இவர்களை கல்வித்தினைக்கலத்தின் கீழ் கொண்டுவருவதே எமது நிலைப்பாடு அவர்களை தொடர்ந்து சேவையில் இணைக்கவே நாம் நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றார்

Comments
Loading...