தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் கட்டுரை எழுதி கின்னஸ் சாதனை

 jeyarajaj-record-310814-seithy (1)

திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது -56 ) தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் கட்டுரை எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் நேற்றுக் காலை 8.00 மணிக்கு இந்த சாதனை முயற்சியை ஆரம்பித்தார்.

கரண்சி இல்லாத உலகம் எனும் தலைப்பில் அவர் முதல் 04 மணித்தியாலங்கள் எழுத்தும் எனது வாழ்வும் எனும் பொருளிலும், அடுத்த 04 மணித்தியாலங்கள் எனது வாழ்வும் உங்கள் கரண்சியும் என்ற பொருளிலும், இறுதி 04 மணித்தியாலங்கள் கரண்சி இல்லாத உலகம் எனும் தலைப்பிலும் எழுதியுள்ளார். நேற்றிரவு தனது சாதனை முயற்சியை நிறைவு செய்த எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜாவுக்கு பிரமுகர்கள் பலரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

Comments
Loading...