தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீனவர்களில் ஒரு பிரிவினர் தம்மை இழுவைப் படகுகளில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்

வடமாகாணத்தின் மீனவர்களில் ஒரு பிரிவினர் தம்மை இழுவைப் படகுகளில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். வடமாகாண சபையிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறை மீனவர்கள் வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பி.டெனீஸ்வரனை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.porrt

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் காரணமாக தமக்கு நட்டமேற்படுகிறது.எனவே அதனை சீர்செய்து கொள்வதற்காக தமக்கு இழுவைப் படகு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் கோரியுள்ளனர்.இலங்கையில் இழுவைப் படகு உட்பட்ட 18 மீன்பிடி உத்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இழுவைப் படகுகளுக்கு அனுமதியளிக்க முடியாது என்று அமைச்சர் டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.கடல் வளத்தை அழிக்கும் என்பதாலும் சிறுதொகையினரே இந்தக் கோரிக்கையை விடுத்திருப்பதாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...