Designed by Iniyas LTD
தொடர் மழையால் கைவிடப்பட்ட உலகக்கோப்பை தொடர்
உலகக்கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் நெதர்லாந்து அணி தொடரிலிருந்து வெளியேறியது.
இதனால், நெதர்லாந்து அணி பிரதான சுற்று வாய்ப்பை இழந்துள்ளது, தரம்சாலாவில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஓமன் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாட இருந்தன. ஓமன் அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், டாஸ் வென்ற ஓமன் முதலில் பந்து வீச தீர்மானித்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மழை விட்டதும் ஓவர்கள் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் போட்டியை தொடங்க முடியாத அளவிற்கு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டது. எனவே, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நெதர்லாந்து அணி வங்காளதேசத்திடம் போராடி தோல்வி யடைந்தது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பை நெதர்லாந்து அணி இழந்துள்ளது.