தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சொ.குவிப்பு வழக்கில் திமுக பொன்முடி நீதிமன்றில் ஆஜர்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குகளில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.  ponmudi

விழுப்புரம் மாவட்டம்  பூத்துறையில் உள்ள செம்மண் குவாரியில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டியதாகவும், இதனால் அரசுக்கு 28 கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 8 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜரானார்.

வழக்கு விசாரணை இந்த மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கும் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கிலும் பொன்முடி ஆஜரானார்.   இதையடுத்து விசாரணை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments
Loading...