தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தோல்வியை தவிர்க்க போராடுகிறது ஆஸ்திரேலியா

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அபுதாபி டெஸ்டில் பாகிஸ்தானின் கை ஓங்கியுள்ளது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2-ஆவது டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்துவதால், 20 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது.Pakistan-vs-Australia-

இரு அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் யூனிஸ் கான் இரட்டைச் சதம், கேப்டன் மிஸ்பா உல் ஹக், அஸார் அலி சதம் அடிக்க பாகிஸ்தான் 570 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

2-ஆவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்தது. சனிக்கிழமை 3-ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. டேவிட் வார்னர் 19 ரன்களிலும், நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய நாதன் லியான் 15 ரன்களிலும் வெளியேற, மேக்ஸ்வெல் சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். பின் அவர் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர், மிச்செல் மார்ஷ் மற்றும் கேப்டன் மைக்கேல் கிளார்க் மட்டுமே பொறுப்புடன் ஆடினர். 6-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 ரன்கள் எடுத்தது. கிளார்க் 47 ரன்கள் எடுத்திருந்தபோது இம்ரான் கான் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்து வெளியேற, மறுமுனையில் 56 பந்துகளில் அரைசதம் கடந்தார் மிச்செல் மார்ஷ். 9-ஆவது விக்கெட்டுக்கு பீட்டர் சிடில், மார்ஷ் ஜோடி 62 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியா கெளரவமான ஸ்கோரை எட்டியது. இருப்பினும் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 261 ரன்களில் சுருண்டது. இதனால் முதல் இன்னிங்ஸில் 309 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஆனால், பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஃபாலோ ஆன் விதிக்கவில்லை.

அடுத்து 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. அஸார் அலி 21 ரன்களுடனும், யூனிஸ் கான் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக அஹமது ஷேஸாத் 14 ரன்களிலும், முகமது ஹஃபீஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்

Comments
Loading...