தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

த ம பேரவையின் அரசியல் வரைபு சமர்ப்பிக்கப்படுகிறது!

TPC1தமிழ் மக்கள் பேரவை தனது அரசியலமைப்பு வரைபினை பூரணப்படுத்துவது தொடர்பினில் அறிவித்துள்ள நிலையினில் வடமாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகள் 7ம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனிடம் நேரில் கையளிக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை வரைபை தயாரிக்க 19 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது.இக்குழு நேற்று  மாலை 5.30 மணி தொடக்கம் 8 மணி வரையில் வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட யோசனைகளை நிறைவு செய்வது தொடர்பாக பேசியிருந்தது.
இச்சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் எமது யோசனைகளை பூர்த்தி செய்து எதிர் வரும் 7ம் திகதி மாகாண சபையில் உறுப்பினர்களின் கருத்துக்களை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும்.
அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனிடம் கையளிக்கப்படும். மேலும் 19பேர் கொண்ட குழு 3 உப குழுக்களாக பிரிக்கப்பட்டு தமிழர்களின் வரலாற்றை அறியவும், அரசியல் ரீதியான கொள்கைகளை அறியவும், தமிழர்கள் தனித்துவமாக எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறியவும் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த உப குழுக்களின் கருத்துக்கள் அடிப்படையில் ஒரு கருத்து உருவாக்கப்பட்டு அந்த கருத்தே சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Comments
Loading...