Designed by Iniyas LTD
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஸ்டாலினைச் சந்தித்ததில் அரசியல் இல்லை: நக்மா
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததற்கும், மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததற்கும் எந்த அரசியல் தொடர்பும் இல்லை என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா கூறினார்.
தமிழகம், புதுச்சேரியில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் திங்கள்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-
மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். தமிழகப் பிரச்னைக்காக திமுகவும் காங்கிரஸýம் இணைந்து போராடுவது குறித்து ஆலோசித்தேன். ரஜினிகாந்தையும், ஸ்டாலினையும் சந்தித்ததில் எந்தவித அரசியல் தொடர்பும் இல்லை.
தமிழக அரசின் நிர்வாகம் முடங்கி உள்ளது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மூடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற முன் வரவேண்டும். அதிமுகவின் சின்னத்தை மீட்பதற்காகவே இரு தரப்பினரும் நாடமாடுகின்றனர். தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்றார்.