Designed by Iniyas LTD
நண்பனாக இருங்கள் முடியாவிட்டால் எதிரியாக இருங்கள் ஒருகாலமும் துரோகியாக இருக்காதீர்கள் –சிவமோகன்
மக்களே உங்களுக்கு நான் ஒன்றினை சொல்கின்றேன் நண்பனாக இருங்கள் முடியாவிட்டால் எதிரியாக இருங்கள் ஒருகாலமும் துரோகியாக இருக்காதீர்கள் என்று வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வன்னியின் இறுதி மன்னன் மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆவது ஆண்டு வெற்றி நினைவு நாள் நிகழ்வு நேற்றையதினம் கற்சிலைமடு பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகத்தில் இடம்பெற்றது
இங்கு உரைநிகத்தும் போதே அவர் இதனை தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..
மாவீரன் பண்டாரவன்னியன் இந்த வன்னிமண்ணின் ஒரு அடையாளம் வன்னிமண்ணில் இருந்த இறுதி மன்னனாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த வன்னி மண் என்றும் போராட்டத்திற்கு துணை நின்றது
ஈழத்தமிழர் போராட்டத்தின் போது யாழ் மண்ணில் இருந்து விடுதலைப்புலிகள் விலகியபோது அனைவுரும் அழிந்து விட்டார்கள் என்றுதான் பல் சிந்தித்தார்கள்.
ஆனால் மீண்டும் அவர்கள் முழைஎடுத்தது இந்த வன்னிமண்ணில்தான் வன்னிமண்ணில் முப்படைகளையும் கட்டி ஆண்டவர் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வன்னி மண்ணிற்கும் போராட்டத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது.
இன்னும் ஒருவிடயமாக பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதும் ஒரு துரோகியால்தான் அதேபோல் வே.பிரபாகரன் அவர்களும் சர்வதேச உதவிகளுடன் தோற்கடிக்கப்பட்டதும் சில துரோகிகளால்தான் தமிழர் விடுதலை போராட்டங்கள் முளைத்த காலங்களில் எல்லாம் துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது
பண்டாரவன்னியனுக்கு சிலைவைக்க முற்பட்டபோது பாரிய இடையூறுகளை சந்தித்துள்ளோம் மல்லாவியில் வைத்தபோது அது விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் இறந்தபின் அவரின் சிலையினை உடைப்பது எவ்வளவு கொடூரம் முல்லைத்தீவில் காந்தி அவர்களின் சிலை அடித்து உடைக்கப்பட்டது முல்லைத்தீவில் சவால்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது துரோகிகளும் எங்களுடன் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்கள்.
மக்களே உங்களுக்கு நான் ஒன்றினை சொல்கின்றேன் நண்பனாக இருங்கள் முடியாவிட்டால் எதிரியாக இருங்கள் ஒருகாலமும் துரோகியாக இருக்காதீர்கள்
பண்டாரவன்னியனின் வரலாற்றில் அவன் சாதித்த விடயங்கள் இன்றம் கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது பாதுகாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது
ஆனால் 35 ஆண்டுகால ஈழவிடுதலை போராட்டத்தின் வரலாறுகளை நாங்கள் சேர்த்து வைக்க முடியாத இக்கட்டான நிலையில் வன்னிமண்ணில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இதற்கான காலங்கள் உருவாக வேண்டுமெனில் நாங்கள் ஒற்றுமையாக பயணிக்கவேண்டியவர்களா இருக்கின்றோம்.
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் மீண்டும் ஒரு காட்டிக்கொடுப்புக்கள் இங்கு இடம்பெறாது என வரலாற்றில் நம்பலாம் தமிழர்களின் ஒற்றுமையினை உருக்குலைக்க பலர் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் தமிழர்களின் ஒற்றுமை குலைக்கப்படுமாக இருந்தால் இளைஞர்களாக நாங்கள் திரண்டு அவர்களின் முகத்திரையினை உடைத்தெறிவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்