தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நந்திக்கடலை கையகப்படுத்தும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்களம்….

முல்லைதீவில் திட்டமிட்டு வரும் நிலசுவீகரிப்பில் வனஜீவராசிகள் திணைக்களம்    அடுத்து நந்திக்கடலை  கைப்பற்றும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
நந்திக்கடல் மற்றும் நாயாறு ஏரி என்பவையினை இயற்கை ஒதுக்கிடமாக அரசு அறிவித்துள்ளதுடன் வர்த்தமானி அறிவிப்பினையும் விடுத்துள்ளது.
 வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் எல்லைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏற்கனவே வடமராட்சி கிழக்கு,மன்னார் என பல இடங்களிலும் வனஜீவராசிகள் திணைக்களம் பெருமளவிலான காணிகளை ஆக்கிரமித்துள்ளது
அதோடு குறித்த பிரதேசங்களில்   மக்கள்  நடமாடவும் தடை விதித்துள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கியமான பிரதேசங்களான்   நந்திக்கடல் மற்றும் நாயாறு ஏரியினை இலக்கு வைத்து  அரசாங்கம்  தனது நகர்வுகளை முன்னெடுத்துவருகின்றமை  குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...