தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நல்லாட்சி அரசின் நீதி: ஹிருணிகாவுக்குப் பிணை

Hirunika Premachnadra

ஸ்ரீலங்காவின் பிரபல அரசியல்வாதி பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான ஹிருணிகா பிரேமச்சந்திர கடத்தல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

தெமட்டகொடை பகுதியில் நடந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவுக்குத் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா குற்றத்தடுப்புப் பிரிவு இன்று அவரை கைது செய்தது.

ஆனாலும் காலை கைது செய்யப்பட்ட ஹிருணிகா இன்றைய தினமே பிற்பகல் தனக்கான பிணை விடுதலையை பெற்றுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செல்ல அனுமதித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்ட ஹிருணிகா கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஆளும் கட்சியை விட்டு விலகி பொது எதிரணிக்கு ஆதரவளித்தார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துபோட்டியிட்டார்.

தனது தந்தையார் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலைக்கு நீதி வேண்டும் என்று கோரியே ஹிருணிகா பிரேமச்சந்திர அரசியல் பிரவேசம் செய்தார். அத்துடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நீதி தரவில்லை என்றும் விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் கட்டத்தல் சம்பவம் ஒன்றுக்கு ஆளாகியுள்ள ஆளும் கட்சிப் பிரமுகரான ஹிருணிகா பிரேமச்சந்திர நல்லாட்சி அரசு என தன்னை அறிவிக்கும் சிறிலங்கா அரசிற்கு சிக்கலை ஏற்படுத்தியிருந்தார்.

தற்போது இடம்பெற்ற ஹிருணிகாவின் கைதும் பிணை விடுதலையும் ஸ்ரீலங்கா அரசின்  நீதித்துறை குறித்து சந்தேகத்தையும் விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது.

Comments
Loading...