தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நல்லூர் திருவிழாவிற்கு சென்ற இளைஞனை காணவில்லை – தாயார் முறைப்பாடு..

நல்லூர் மகோற்சவ திருவிழாக்கு சென்ற இளைஞனை காணவில்லை என தாயாரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

யாழ்.கந்தர்மடம் மணல்தறை வீதியை  சேர்ந்த சி. சரண்ராஜ் (வயது 18) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றுபவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த  ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் நல்லூர் திருவிழாவுக்கு சென்று வருவதாக கூறி  சென்ற இளைஞன் இன்று திங்கட்கிழமை மதியம் வரை வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தாயாரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தது.

Comments
Loading...