Designed by Iniyas LTD
நவநீதம்பிள்ளை பக்கசார்பாக செயற்படுகிறார் .ரவிநாத் ஆரியசிங்க .

போர்க்குற்றசாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று நிறுவப்பட வேண்டும் எனவும், உள்ளக விசாரணைகளை சர்வதேச சமூகம் கண்காணிக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார்.
நவநீதம்பிள்ளை தேவையற்ற வகையில் நாடொன்றின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகவும் அவரின்அறிக்கை முன்கூட்டிய தீர்ப்பை வழங்கக் கூடிய வகையிலும் திட்டமிட்ட வகையில் சிறீலங்காவுக்கு எதிராக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்ட ஐ.நாவுக்கான சிறீலங்கா நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க , நவநீதம்பிள்ளை பக்கச்சார்பான முறையில் செயற்பட்டு வருவதாக வும் அவரது கோரிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.