தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாங்கள் எங்களை பற்றி யோசிக்காமல் குழந்தைகள் பற்றி யோசிக்க வேண்டும்- அர்ஜீன ரணதுங்க

அன்று எங்களுடைய முன்னோர்கள் செய்த அர்பணிப்பின் விளைவாக நாங்கள் இன்று சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம். அதற்கமைவாகவே எங்களுடைய அர்பணிப்புகளின் விளைவாக எமது குழந்தைகள் எதிர்காலத்தில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பார்களென…’ துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார். நாளை தினம் கொண்டாடப்படவுள்ள 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட செய்தியில் இக்கருத்தினை வெளியிட்டார்.             Arjuna-Ranatunga

 ‘ நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு கூட்டு அரசாங்கமொன்றினை அமைத்தன் பின்னர் நாங்கள் வருகின்ற முதலாவது சுதந்திர தினத்தை நாளை கொண்டாடவுள்ளோம். எங்களுடைய எதிர்கால குழந்தைகளின் நலனை குறிக்கோளாகக் கொண்டே இச்சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்பது என்னுடைய வெளிப்படையான விருப்பமாகும்.

சுதந்திரத்தின் பின்னர் நாங்கள் எதிர்பார்க்கின்ற நவீன இலங்கையை உருவாக்கும் பொருட்டு வரலாற்றில் பல சந்தர்பங்கள் கிட்டின. அவற்றுள் மிகவும் முக்கிய நிகழ்வாக பயங்கரவாதிகளிற்கெதிரான யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் உருவாக்கப்பட்ட சமாதானச் சூழலை குறிப்பிடலாம்.

ஆனால் துரதிஸ்டவசமாக நவீன இலங்கையை உருவாக்கும் பொருட்டு தேவையான சமூக , பொருளாதார அரசியல் மீள்ளமைப்புக்களை முன்னெடுப்பதற்கு கடந்த அரசாங்கம் தவறிவிட்டது. ஒரு சில ஆண்டுகளாக பின்னடைந்துள்ள சமூக , பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளை புதிய செயற்பாடுகளின் அடிப்படையில் மறுசீரமைப்பதே நாங்கள் எதிர்க்கொள்ளும் பிரதான சவாலாகும்.

இதன் பொருட்டு ஜனாதிபதி – பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உரிய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன.நாங்கள் நினைப்பதைப் போன்று மிக விரைவாக நவீன இலங்கையை உருவாக்குவது கடினமானச் செயலாகும். சுதந்திரத்தை பெற்று 68 ஆண்டுகளிற்கு பின்னர் பழைமை வாத எண்ணங்களையுடைய பலர் எம்மத்தியில் உள்ளார்கள்.

இவற்றுள் மிகவும் பயங்கரமான காரணியாதெனில் அரசியல் இலாபத்தை ஈட்டிக்கொள்ளும் பொருட்டு வர்க முரண்பாடுகள் , மத முரண்பாடுள் மற்றும் இன முரண்பாடுளை உருவாக்க ஒரு சில குழுவினர் மிகவும் அத்தியாவசிய தேவையான சமூக, பொருளாதார  மற்றும் அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எங்களால் இதுவரையில் நெருங்க முடியாதிருந்த உண்மையான சுதந்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பொருட்டுள்ள பிரதான கட்டளையான அரசிற் நல்லிணக்கம் உயரியதரத்தில் மேம்படுத்துவதன் மூலமாக இச்செயற்பாட்டினை மேலும் இலகுவானதாக்கிக் கொள்ளலாம்.

நாங்கள் உண்மையாகவே எம்மைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. எங்களது குழந்தைகளை பற்றியே சிந்திக்க வேண்டும். எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் வளமானதாக அமைய வேண்டுமாயின் சமூகம் வேண்டுகின்ற மறுசீரமைப்பை இன்றே நடைமுறைப்படுத்த வேண்டும். அன்று எங்களது முன்னோர்களின் அர்பணிப்புக்களின் விளைவாக நாங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம். அதற்கமைவாகவே எங்களுடைய அர்பணிப்புகளின் விளைவாக எமது குழந்தைகள் எதிர்காலத்தில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பார்களென …’ அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...