Designed by Iniyas LTD
நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
நாடளாவிய ரீதியில் இன்று முதல் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 வருடங்களாக நீடித்து வரும் அஞ்சல் சேவை தரம் 11 இற்கான நியமனங்களை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இன்று நள்ளிரவு முதல் அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை இப் போராட்டத்திற்கு ஆதரவாக மலையகத்தில் உள்ள தபால் திணைக்கள உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.