தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி நாடெங்கும் போராட்டம்…

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி, நாடெங்கும் போராட்டங்களை நடத்துவதற்கு மகிந்த அணி தீர்மானித்துள்ளது.

நேற்றுமுன்தினம் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடந்த கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதோடு  தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து, நாடெங்கும் கருத்தரங்குகளை நடத்தவும் மகிந்த அணியினர்  முடிவு செய்துள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களின் மீது எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

இந்நிஒலையில்   தீர்ப்பு எவ்வாறானதாக வந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகும்படி மகிந்த கூறியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசியல் நெருக்கடிகளால், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி அலையைச் சமாளிப்பதற்காக, கூட்டங்களை நடத்த மகிந்த அணி முடிவுசெய்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...