தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு  ஐயங்கன்குளத்தில் நினைவிடம்  அமைக்கும் பணிகள் …

முல்லைத்தீவு  ஐயங்கன்குளத்தில் கடந்த  2007ம் ஆண்டு இராணுவத்தினரின்  ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர்த் தாக்குதலில் உயிரிழந்த 8பேருக்கு  நினைவிடம்  அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் தீர்மானத்துடன்  இந்த பணிகள் நேற்று   ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி மாலை ஐயங்கன்குளம் பகுதியில்  ,நாகரத்தினம் – மதிகரன் வயது 16 , நாகரத்தினம் – பிரதீபா வயது 16 , கருணாகரன் – கௌசிகா வயது 15 , நித்தியானந்தன் – நிதர்சன் வயது 13 ,

சந்திரசேகரம் – டிரோயா வயது 16 , ஆகியோருடன் அற்புதராயா – அஜித்நாத் வயது 16 , சண்முகவடிவேல் – சகுந்தலாதேவி வயது 18 , வைரமுத்து – கிருஸ்ணவேனி வயது 26 ஆகியோரே உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த 8 பேரின் உடல்களும் அதேகிராமத்தில் உள்ள குளக்கரையில் அடக்கம் செய்யப்பட்ட்டிருந்தது..

இந்நிலையில்  நினைவிடத்தில் ஓர் நினைவுத் தூபி எழுப்பி புனித வழிபாடு செய்ய அனுமதி கோரப்பட்டபோதும்,  மரணித்தவர்களின் திகதியை காரணம் காட்டி அனுமதி மறுகபட்டிருந்தது.

அதன்பின்னர்  கடந்த 15ம் திகதி துணுக்காய் பிரதேச சபையில் குறித்த விடயம் தொடர்பில்  தீர்மானம் முன்மொழியப்பட்டிருந்த்து.

இந்த தீர்மானம் தொடர்பில் ஐ.தே.கட்சியின் சார்பு உறுப்பினர் எதிர்ப்பை தெரிவித்தபோதும்,  த. தே. கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம் குறித்த பகுதி இன்று துப்பரவு செய்து நினைவை கடைப்பிடிக்க ஏற்ற ஒழுங்குகள் செய்யப்படுவதுடன் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இப் பகுதியில் நினைவுத் தூபி அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...