Designed by Iniyas LTD
நாடாளுமன்றம் எதிர்வரும் 7 ஆம் திகதி கூட்டப்படாது – மகிந்தானந்த அளுத்கமகே…
நாடாளுமன்றம் எதிர்வரும் 7 ஆம் திகதி கூட்டப்படாது, 16 ஆம் திகதியே கூட்டப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதி தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசு கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இதற்கு முன்னர் கடிதம் ஊடாக சபாநாயகரிடம் கோரியிருந்தன.
அதற்கிணங்க சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அந்த முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன், ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியூர்தீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அவர்களுடன் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திப்பில் பங்குப்பற்றினர்.
மேலும் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த கட்சியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத்தும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது..