Designed by Iniyas LTD
நாடாளுமன்ற கலைப்பிற்கு எதிராக 10 மனுக்கள் இன்று தாக்கல்..
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி என்பவை மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் பிரதிநிதிகள் ஆகியோரின் பெயர்கள் இடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
