Designed by Iniyas LTD
நாடுகடந்த தமிழீழ அரசாங்க அவை உறுப்பினர்களிற்கான வரவேற்பு நிகழ்வு -2019



நாடுகடந்த தமிழீழ அரசாங்க அவை உறுப்பினர்களிற்கான வரவேற்பு நிகழ்வு -2019
நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களிற்கான வரவேற்பு உபசார நிகழ்வு-2019 இன்று உலகத்தமிழர் வரலாற்றுமையம்,லண்டனில் இடம்பெற்றது
வரவேற்பு நிகழ்வுகள் நிருபன் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்டு நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து பிரித்தானிய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
அதனையடுத்து நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பொது மாவீரர் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்தல் ஈகை சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் வரவேற்புரையினை தமிழர் விடுதலை நடுவம் நிருபன் ஆற்றினார்கள்.
அதனைத்தொடர்ந்து சிறப்புரையினை பாலா ஆசிரியரும் வழங்க, தொடர்ந்து பிரதமர் மதிப்புக்குரிய கவி. உருத்திரகுமாரன் அவர்கள் தொலைபேசிவாயிலாக சிறப்புரையினை ஆற்றினார்.
அவர் ஆற்றிய சிறப்புரை வருமாறு,
இன்று லண்டன் உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க அவை உறுப்பினர்கள் நிகழ்வு -2019 இடம்பெற்றுள்ளது.
கடந்த2009 இனப்படுகொலையின் போது தமிழீழம் அழிக்கப்பட்டது.
இதன்காரணமாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
பல எதிர்ப்புகளைன் மத்தியிலும் எமது மாவீரகளின் கனவை நனவாக்க உறுதியுடன் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.
எம்மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்த நிலையில் , நாடுகடந்த அரசின் முதலாவது தேர்தல் வெற்றியை முன்னெடுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வருடத்தில் 2 அமர்வுகளை நேரடியாகவும், மாத்தில் ஒருமுறை தொலைபேசிவாயிலாகவும் செயற்படுகின்றோம். அதோடு பல்வேறு வேலைத்திட்டங்களையும் நாம் முன்னெடுத்து செயல்பட்டுவருகின்றோம்.
தமிழர்களின் தலைவிதி தமிழர் கையில் என்ற உறுதிமொழியுடன் நாம் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.










