Designed by Iniyas LTD
நாட்டின் 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் அளவு குறைந்தது: மத்திய நீர்வளத் துறை
நாடு முழுவதிலும் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் மொத்த கொள்ளளவு இந்த வாரத்தில் 70 சதவீதமாகக் குறைந்தது. இது, கடந்த வாரத்தை விட 2 சதவீதம் குறைவாகும்.
இதுகுறித்து மத்திய நீர்வளத் துறையின் சார்பில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டில் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒட்டுமொத்தமாக 3,88,000 கோடி கன அடி தண்ணீர் உள்ளது. தற்போது, மொத்த கொள்ளளவில் 72 சதவீத தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் நீர்த்தேக்கங்களின் தண்ணீர் இருப்பு 129 சதவீதமாக இருந்தது.
கடந்த வாரத்தில் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 3,99,000 கன அடியாக இருந்தது. நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 5,57,000 கன அடிகளாகும். இவற்றில், ஹிமாசலப் பிரதேசம், திரிபுரா, கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டை விட குறைவாகவும், உத்தரகண்ட் மாநிலத்தில் சென்ற ஆண்டு இருந்த அதே அளவு தண்ணீரும் காணப்படுகிறது.
பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் கடந்த ஆண்டை விட நீர் இருப்பு அதிகமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.