Designed by Iniyas LTD
வடமாகாண சபை தீர்மானத்தினை அனுப்புமாறு குரே கடிதம்!
வட மாகாண அமைச்சர்களுற்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் வட மாகாண சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை அனுப்பி வைக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கடிதமூலம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
வட மாகாண அமைச்சர்களுற்கு எதிரான விசாரணையை மேற்கொள்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் தலமையிலான குழுவிற்கான அனுமதியினை வழங்குமாறும் இதற்கான நிதி அனுமதியும் ஆளுநரிடம் கோரப்பட்டிருந்தது.
குறித்த அனுமதி தொடபில் பரிசீலணைக்காக விசாரணைக்குழு தொடர்பில் வட மாகாண சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினையும் , அங்கு மேற்கொள்ள வேண்டியுள்ள விசாரணைகளின் விபரங்களையும் அனுப்பி வைக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே பேரவைத் தலைவர் மற்றும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதம் பேரவைத் தலைவருக்கு முகவரியிட்டு முதலமைச்சர் , ஜனாதிபதி , ஜனாதிபதியின் செயலாளர் , பிரதம செயலாளர் ஆகியோருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.