Designed by Iniyas LTD
நாட்டில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 20 பேர் கைது..
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புக்களின் போது கடந்த 24 மணி நேரத்துக்குள் 20 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 21 ஆம் திகதி கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதோடு நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கையின் போது இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.