Designed by Iniyas LTD
நாட்டில் தேசிய அரசாங்கமே வேண்டும்- சுமந்திரன்….
நாட்டில் தேசிய பிரச்சினைகளை தீர்க்க தேசிய அரசாங்கமே வேண்டும் எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதோடு பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைக்க முடியுமென்றால் அதனை தாம் வரவேற்பதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கவும் அதில் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையுடன் இணைந்து சகல தரப்பையும் இணைந்துக்கொண்டு பயணிக்க தயார் என ஐக்கிய தேசிய கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகள் என்ன என்பது குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.