தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டைப் பிளவுபடுத்தவோ வேறு சக்திகளிற்கு அடிபணியவோமாட்டோம் – ஜனாதிபதி

நாட்டைப் பிளவுபடுத்தவோ, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியவோ கூட்டு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மன்னம்பிட்டியவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்,

அனைத்துலக அழுத்தங்களில் இருந்து போர் வீரர்களை நல்லாட்சி  அரசாங்கம் தான் விடுவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில அரசியல்வாதிகள், லிப்டன் சதுக்கத்தில் நின்று கொண்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாது, போர் வீரர்களை பாதுகாக்க வேண்டும் என கூறி  காலம் கடந்த முழக்கங்களை எழுப்பி தமது அரசியல் நோக்கங்களை அடைய முனைகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான இந்த முழக்கங்கள் இப்போது காலாவதியாகி விட்டவை என்றும்.

மின்சார நாற்காலி, அனைத்துலக நீதிமன்றங்கள், வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய அச்சங்களுக்கு நல்லாட்சி  அரசாங்கம் ஓய்வு கொடுத்து விட்டதாகவும்   அவர் இதன்போது மேலும்  தெரிவித்துள்ளார்.

Comments
Loading...