Designed by Iniyas LTD
யாழ், மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன் சபையின் அமர்வுகளில் பங்கேற்க தடை..
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ், மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன், மாநகர சபையின் அமர்வுகளில் பங்கேற்க கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சித் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சார்பில், நியமிக்கப்பட்ட மணிவண்ணனை யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடுமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றிடம் கோரியிருந்தார்.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.