தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்றம்பள்ளி திமுக அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஜோலார்பேட்டை திமுக வேட்பாளரை மாற்றக் கோரி, நாட்றம்பள்ளி திமுக அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  jolarpet

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராக கவிதா தண்டபாணி நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்றம்பள்ளி திமுக அலுவலகம் முன்பு திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   கவிதா தண்டபாணி திருப்பத்தூர் தொகுதி கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்டவர் என்றும், அவருக்கு ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்டவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து வந்த திமுக ஒன்றிய செயலாளர் சூரியகுமார் தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.

Comments
Loading...