தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நான் முதலமைச்சர் ஆனால் குடிநீர் பஞ்சத்தை போக்குவேன்!

201605111034508640_Ulundurpet-constituency-removed-drinking-water-famine_SECVPFஉளுந்தூர்பேட்டை தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் தங்கியிருந்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள ஆரியநத்தம், கிழக்கு மருதூர் உள்பட பல கிராமங்களில் வேனில் இருந்தபடி அவர் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அப்போது விஜயகாந்த் பேசியதாவது:-

நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். இந்த பூமி அனைத்தும் விவசாய பூமியாகும். ஆனால் இங்கு விவசாயம் சரியாக நடைபெறவில்லை. இங்குள்ள கிராமங்களில் சாலைகள் குண்டும்-குழியுமாக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இங்கு சரியான சாலை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. நான் வந்ததும், இங்கு தரமான சாலை அமைத்து தருவேன்.

மேலும் இங்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. என்னை பற்றி கேட்டுப்பாருங்கள், விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்தேன்.

அதேபோல் இங்கும் நான் வெற்றி பெற்று வந்ததும் மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்க செய்து, குடிநீர் பஞ்சத்தை போக்குவேன். ஏரிகள் அனைத்தையும் தூர்வாருவேன்.

திருநாவலூர் ஒன்றியத்துக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். நீங்கள் யாரையும் பார்த்து பயப்பட வேண்டாம். உங்களுக்காக நான் இருக்கிறேன். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து இந்த பகுதியை வளர்ச்சியடைய விடாமல் தடுத்து வருகிறார்கள்.

எந்த கொம்பனாலும் என்னை அசைக்க முடியாது. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி பாடுபடுவேன். எனக்கு எதிரிகளே இல்லை.

எனக்கு அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. தொண்டர்கள் யாரும் எதிரிகள் கிடையாது. அவர்களது கட்சிகளின் தலைமையே எனக்கு எதிரிகள் ஆவர். ஆறு கட்சி கூட்டணியான எங்களுக்கு எப்பொழுதும் ஏறுமுகம்தான். எனவே மக்களே முரசு சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட எறையூர்பாளையம், எல்லை கிராமம் உள்ளிட்ட கிராமங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

Comments
Loading...