தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் 400 கோடி கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில்!

201605111042019196_Fake-notes-worth-Rs-400-crores-in-circulation_SECVPFகொல்கத்தாவில் இயங்கும் இந்திய புள்ளியியல் நிறுவனம் நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் குறித்து ஆய்வு மேற் கொண்டது. அந்த ஆய்வில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

அதன்படி இந்தியாவில் ரூ.400 கோடி கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் ரூ.100 மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகள் பெருமளவில் புழக்கத்தில் விடப்பட்டு அவை பிடிபட்டுள்ளன. அதே நேரத்தில் இதைவிட 1000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் சிக்குகின்றன. நாட்டில் பிடிபடும் கள்ள ரூபாய் நோட்டுகளில் 50 சதவீதம் 100 ரூபாய் நோட்டுகள்தான் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் ஆண்டுக்கு ரூ.70 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. தினமும் புழக்கத்தில் இருக்கும் ரூ.10 லட்சத்தில் ரூ.250 அளவில் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கள்ள ரூபாய் நோட்டுகளை அண்டை நாடான பாகிஸ்தான் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க இது போன்ற மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அங்கு அச்சிடப்படும் கள்ள ரூபாய் நோட்டுகள் வங்காள தேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பீகார் வழியாக இந்தியாவுக்குள் அனுப்பபடுகிறது.

ஜார்ஜா வழியாக உணவுப் பொட்டலங்கள் என்ற பெயரில் விமானம் மூலமும் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன. கடந்த 2015–ம் ஆண்டில் 9 முதல் 10 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, அரசு மெத்தனம் காட்டாமல் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க தீவர நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய புள்ளியியல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Comments
Loading...