Designed by Iniyas LTD
நான் ரன் குவிக்கும் எந்திரம் அல்ல – விராட்
நான் ரன் குவிக்கும் எந்திரம் அல்ல. நாங்களும் மனிதர்கள் தான் என இந்திய அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.மீண்டும் பார்முக்கு திரும்ப எனக்கு ஒரு சிறந்த இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அது கடந்த ஆட்டத்தில் நடந்து விட்டது.
நிபுணர்களும், மீடியாக்களும் நான் ஆட்டம் இழக்கும் விதம் குறித்து விமர்சிப்பது வேடிக்கையானது. கடந்த இரண்டு, மூன்று ஆட்டங்களில் நான் சரியாக ஆடவில்லை. உடனே மக்கள் நீங்கள் பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கடந்த 4–5 ஆண்டுகளாக எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் நான் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்ததை அவர்கள் மறந்து விட்டார்கள். இதை நான் பந்தாவுக்காக சொல்லவில்லை. இது தான் எனது இயல்பு. நாங்கள் மனிதர்கள். எந்திரங்கள் அல்ல என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது என கோஹ்லி தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விராட் கோஹ்லி 67 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.