Designed by Iniyas LTD
நாம் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்பியுள்ளோம் – ஜீ எல் பீரிஸ்
இந்தியாவுடன் வலுவான உறவைக் கட்டியெழுப்பியுள்ளதாகவும், அதனை ஒருபோதும் உடைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட கட்டுரையால், இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நான் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன் பேசினேன்.தவறுகள் நடந்திருக்கிறது என்றும், அதனை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.இது உறவுகளை முறித்து விடாது.நாம் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்பியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்