தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈபிடிபி பிரமுகர்கள் தெரிவித்த கருத்தையடுத்து வெளிநடப்பு செய்த மீசாலை மக்கள்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோர் தொடர்பாக ஈபிடிபி பிரமுகர்கள் தெரிவித்த கருத்தையடுத்து மக்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் மீசாலையில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்றுள்ளது.people

ஈபிடிபியின் ஏற்பாட்டில் சமுர்த்தி சங்கத்தினருடனான கூட்டம் மீசாலையில் நடைபெற்றிருந்தது. காரணமேதும் தெரிவிக்காது அழைக்கப்பட்ட மக்கள் உதவிகளை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்கள் பற்றி வருகை தந்திருந்தவர்கள் கருத்துக்களை முன்வைக்க முற்பட மக்கள் முரண்பட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலையில் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த ஈபிடிபியும் காரணமென வாதிட்ட மக்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மரணங்கள் பற்றி பேச ஈபிடிபிக்குத் தகுதியில்லையென மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து மக்கள் வெளியேறி சென்றிருந்த நிலையில் தமது ஆதரவாளர்களை வைத்து அக்கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

Comments
Loading...